search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலாப்பழம் விற்பனை"

    பெரம்பலூர் பகுதியில் நாவல் மற்றும் பலாப்பழங்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டால் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகரில் சாலையோரங்களில் ரம்புட்டான், நாவல் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்த அந்த ருசியாக உள்ள ரம்புட்டான் பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கேரளா மலைப்பகுதிகளில் ரம்புட்டான் பழங்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளதால், அதன் வரத்து அதிகமாக உள்ளது. 1 கிலோ ரம்புட்டான் பழங்கள் ரூ.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் தற்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் நாவல் பழங்கள் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரம்புட்டான் பழங்களின் சீசன் தொடங்கி விட்டதால், அதன் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    ரம்புட்டான், நாவல் பழங்களை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை அமோகமாக இருக்கிறது, என்றார்.

    இதேபோல் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழங்கள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே விற்பனைக்காக அதிகமாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலாப்பழம் விற்பனை செய்யும் வியாபாரி கூறுகையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப்பழங்கள் அதிகமாக விளைச்சலாகி உள்ளது.

    இதனால் அங்கிருந்து மொத்தமாக பலாப்பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். 10 கிலோ எடையுள்ள பலாப்பழம் ரூ.150-க்கு விற்கப்படுகிறது என்றார்.

    ×